How to maintain your bikes?

 How to maintain your bikes? 

How Many Kilometres Should We Change Engine Oil In A Bike? 

Change Engine Oil

How Many Km Change Engine Oil 

வணக்கம் நண்பா,  அனைவரும் Bike வைத்துக் கொண்டு இருக்கிறோம்.  இதை சரியான முறையில் பாதுக்காத்துக் கொள்ளவேண்டும் இல்லை எனில் Bike சரியாக ஓடாது.  இந்த பதிவில் Bike இல் எத்தனை Km ஒருமுறை Engine Oil Change பண்ண வேண்டும் என்று பார்ப்போம்.  அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம் இந்த பதிவும்.  

நாம் Bike இல் சுற்றிக்கொண்டு இருப்போம், ஆனால் அதற்கு Oil எப்பொழுது மாற்றினோம் என்று மறந்து விடுவோம்.  அதை பற்றியே கவனம் இருக்காது.  இதனால் நம் Bike Engine அதிகம் சூடாகி engine Repair ஆகிவிடும்.  Engine சரி செய்வதற்காக சுமார் 10,000 முதல் 20,000 வரை செலவு ஆகும்.  இதையெல்லாம் தடுக்க ஒரே வழிதான் உள்ளது.  சரியாக Engine Oil மாற்ற வேண்டும். 

சுமார் 2000 Km ஒருமுறை engine oil Change பண்ண வேண்டும்.  நீங்கள் ஒரே நாளில் 2000 km bike ஓட்டினாலும் கண்டிப்பாக oil change பண்ண வேண்டும்.  

நான் அதிகமாக bike இயக்க மாட்டேன் எனக்கு தேவைப்படும் பொழுதுதான் bike எடுப்பேன் என்று கூறுபவர்கள்.  6 month ஒருமுறை Engine Oil Change பண்ண வேண்டும்.  

இப்படி செய்தால் உங்கள் bike engine அருமையாக இருக்கும். Oil தன்மை engine க்கு மிகவும் அவசியம்.  இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.  

When to replace bearings on a bike?

replace bearings

Bike இல் உள்ள Bearings எப்பொழுது மாற்றுவது?

Bike மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும்.  இந்த பதிவில் Bike இல் உள்ள Bearings எப்பொழுது மாற்றுவது? அதை எப்படி மாற்றுவது என்று முழுமையாக காண்போம்.  Bike இல் பல தூரம் பயணம் செய்வோம்.  அது அனைவருக்கும் பிடிக்கும்.  Bike இல் உள்ள ஒவ்வொரு பொருளையும் காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும்.  இல்லையெனில் bike நன்றாக போகாது.   இதேபோல தான் பைக் இல் உள்ள Bearings முக்கியம். 

இந்த bearings 40,000 KM ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.  இல்லையெனில் பைக் சரியாக போகாது.  Bike Wheel Shake ஆகும்.  இதனால் பைக் ஓட்டவே பிடிக்காது.  

என்னுடைய நண்பனும் இதே பிரச்சனையை சந்தித்தான்.  பைக்கில் உள்ள அனைத்து Bearings கண்டிப்பாக 40,000 Km இல் மாற்றவேண்டும்.   இதனால் என் நண்பனுக்கு சரியாக Milage கிடைக்க வில்லை bike சரியாக போகவில்லை.  அவன் உடனடியாக Bearings மாற்றினான்,  பிறகு தான் பைக் தரமாக இருந்தது.  சரியான mileage கொடுத்தது.  

நீங்களும் நான் கூறிய km இல் bearings மாற்றி கொள்ளுங்கள் அதுதான் நல்லது.  இல்லையெனில் பெரிய பிரச்சனையில் முடியும்.  சரியான நேரத்தில் Bearings மாற்றிக்கொள்ளுங்கள்.  

How to clean dirt bike air filter at home? 

bike air filter

Bike air filter வீட்டில் இருந்தே எப்படி சுத்தம் செய்வது 

Bike வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பொருளையும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அப்பொழுது தான் bike நன்றாக இருக்கும்.  பைக் இல் உள்ள Engine Oil எவ்வளவு முக்கியமோ அவ்வளவு air filter முக்கியம். 

நாம் பொதுவாக air filter இருப்பதையே கவனிக்க மறந்து விடுகிறோம்.  Air filter எப்படி வேலை செய்கிறது 

பொதுவாக அனைத்து வாகனத்திலும் air filter இருக்கும்.  இந்த Air Filter சுத்தமான காற்றை உள்வாங்கி Carburetor க்கு அனுப்புகிறது.  Carburetor சரியான காற்றை petol மூலம் கலந்து எரிபொருளாக மாறி வாகனத்தை இயக்க செய்கிறது.   இந்த சுத்தமான காற்றை filter செய்வதற்காக தான் air filter கொடுக்கப்பட்டுள்ளது.  Air filter பஞ்சி போல இருக்கும்.  அதில் அழுக்கு படிந்து இருக்கும்.  இந்த Air Filter 3000 km ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.  Air filter சுத்தம் செய்யும் முறை 

பைக்கில் உள்ள air filter கழட்டி தேவைப்படும் அளவு petrol எடுத்துக்கொள்ள வேண்டும்.  Air filter மீது Petrol சிறிதளவு ஊற்றி கையில் நன்கு அலச வேண்டும்.  

பிறகு தேவைப்படாத துணியை எடுத்து Air Filter யை நன்கு துடைக்க வேண்டும்.  இப்படி செய்வதனால், Air Filter இல் உள்ள அழுக்கு துணியில் ஒட்டிக்கொள்ளும்.  

பிறகு Air Filter சுத்தமாகி விடும். சுத்தம் செய்த பிறகு bike இல் Air Filter பொருத்திக் கொள்ளலாம்.  Every 3000 km ஒருமுறை இதை சுத்தம் செய்யுங்கள்.  

Air filter 15,000 km ஒருமுறை புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள்.  இப்படி செய்தால் உங்கள் வண்டியில் அடிப்பு ஏற்படாது.  இப்படித்தான் Air Filter Clean செய்யும் முறை.  

How to maintain disc brakes in a bike? 

Bike Disc Brakes Maintain 

Bike இல் மிக முக்கியமான ஒன்று brakes, இந்த பதிவில் Disc Brakes எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முழுமையாக காண்போம்.  

Bike Disc Brakes Maintain, நாம் பைக் ஓட்டிட்டு செல்லும்போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால், நாம் கீழே விழுந்து விடுவோம் நமக்கும் நம் bike க்கும் அடிபட்டு விடும்.  Brake முக்கியம்.  நீங்கள் எங்கேயாவது ஊருக்கோ அல்லது சுற்றுலாவுக்கும் பைக்கில் செல்லும் போது பிரேக் சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொண்டு செல்லுங்கள்.  

Brake பிடிக்காமல் நிறைய நபர்கள் பைக்கில் இருந்து கீழே விழுகிறார்கள்.  இதையெல்லாம் நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள்.  அதேபோல் பைக்கில் செல்லும் பொழுது மெதுவாக செல்லுங்கள்.  

Disc brake பாதுகாக்கும் முறை

நாம் bike water wash செய்வதற்காக கடையில் விடுவோம்.  Wash செய்தபிறகு bike புதியது போல் தெரிவதற்கு அவர்கள் பயன்படுத்துவது Cutting oil இந்த oil bike மீது அடிக்கும் போது Disc மீது oil படும்.  அப்பொழுது brake பிடித்தால் brake சரியாக பிடிக்காது.  இதை சரிசெய்ய துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.  Disc மீது துணியை வைத்து நன்கு துடைக்கவும்.  Disc இல் இருக்கும் oil துணியில் ஒட்டிக்கொள்ளும்.  பிறகு உப்புகாகிதம் எடுத்துக்கொள்ளுங்கள்.  இந்த உப்புகாகிதம் Electric கடைகளில் கிடைக்கும்.  இதன் விலை ₹10 ஆகும்.  அந்த உப்புகாகிதம் சிறியதாக கிழித்துக் கொண்டு Disc மீது நன்கு தேய்க்கவும்.  தேய்த்த பிறகு Disc இல் சிறிய அளவில் Scratch ஏற்பட்டு இருக்கும்.  Scratch இருந்தால் தான் நீங்கள் நன்கு தேய்த்து உள்ளீர்கள் என்று அர்த்தம்.  

பிறகு disc brake பிடித்துப் பார்த்தால் நன்கு Brake பிடிக்கும்.   Water wash செய்யும் போது ஒவ்வொரு முறையும் இப்படி செய்யுங்கள் Disc Brake அருமையாக பிடிக்கும்.  

மழை காலங்களில் அதிகமாக பைக்கை சேருகளில் ஓட்டாதீர்கள்.  ஏனென்றால் சேருகள் அனைத்தும் Disc இல் ஒட்டிக்கொள்ளும் பிறகு Disc Brake பிடிக்காது.  Disc brake இல் துணி வைத்து அடிக்கடி சுத்தம் செய்யுங்கள்.  

Disc fluid  வருடத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளுங்கள்.  உங்கள் பைக்கில் இரண்டு வகை Disc Fluid உள்ளது அவை, Dot 4 - Dot 3 இந்த இரண்டு வகைதான் பைக்கில் உள்ளது.  உங்கள் பைக்கில் எந்த fluid பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கும்.  அந்த fluid மட்டும் பயன்படுத்துங்கள்.  வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக Disc Fluid மாற்றிக் கொள்ள வேண்டும்.  

நீண்டகாலமாக disc fluid மாற்றாமல் இருந்தால் fluid தன்மை இயந்து கட்டி போயிடும்.  பிறகு brake பிடிக்காது.  Caliper இல் உள்ள O ring கூட வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.  இப்படி மாற்றினால் தான் Disc Brake சரியாக வேலை செய்யும்.  இதையெல்லாம் சரிபார்த்து கொள்ளுங்கள் நன்றி.  

How many km to change the bike clutch plate? 

bike clutch plate

How to check clutch plate condition in bike

Bike இப்பொழுது சரியாக போக வில்லை.  பைக் ரொம்ப முக்குது.  பைக்கில் நான் மட்டும்தான் செல்கிறேன் அப்பகூட பைக் முறுகினாலும் போக மாடிங்கிது அப்படியே நிக்கிது.  இது போன்ற பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் உள்ளது. அது என்ன தீர்வு என்று இந்த பதிவில் காண்போம்.  

Bike ஓட்ட ஓட்ட இது போன்ற பிரச்சனை வரதான் செய்யும்.  ஏனென்றால் clutch plate தேய்மானம் ஏற்படுகிறது.  இது இயல்பு தான்.  ஒரு பைக்கில் clutch plate condition நன்றாக இல்லையெனில் bike இல் pickup சுத்தமாக இருக்காது.  Pickup இல்லாமல் இருந்தால் அது Clutch plate தேய்ந்து விட்டது என்ற தெரிந்துக் கொள்ளுங்கள்.  

Clutch plate சீக்கிரம் தேயாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

முதலில் bike அதிவேகமாக ஓட்டக்கூடது.  உங்க விருப்பத்திற்கேற்ப accelerator கொடுக்கக் கூடாது.  நம்ம பசங்க சும்மா முறுக்கு முறுக்குனு முறுகிட்டு ஓட்டுறாங்க அதனால் தான் சீக்கிரமாக Clutch plate தேய்மானம் ஏற்படுகிறது.  

Engine oil தன்மை சரியாக உள்ளதா என சரிபார்த்து மாற்றவேண்டும்.  

Bike Clutch plate life 

Bike இல் clutch plate எத்தனை Km ஒருமுறை மாற்றவேண்டும்?

Bike இல் உள்ள Clutch plate 30,000 km ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.  அப்பொழுதுதான் bike நன்றாக இருக்கும்.  நல்ல Mileage கொடுக்கும்.  முக்கியமாக இரண்டு நபர்கள் மட்டும் தன் ஒரு பைக்கில் போகவேண்டும்.  இப்படி செய்துப் பாருங்கள் நல்ல Result எதிர்பார்க்கலாம்.  

How to change disc brake oil? 

disc brake oil

Bike Disc oil எப்படி மாற்றுவது என்று பார்ப்போம் 

பொதுவாக 10,000 km ஒருமுறையாவது Disc oil எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். ஒரு பைக்கிர்க்கு Brake ரொம்ப முக்கியம்.  அதனை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.  ஒரு சிலர் brake கண்டுக்கவே மாட்டார்கள்.  இப்படி விட்டால் நமக்குத்தான் ஆபத்து.  இதனால் நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை Brake எப்படி இருக்கு என்று பாருங்கள்.  இந்த பதிவில் Disc oil எப்படி மாற்றுவது என்று Step by step பார்ப்போம். 

Step 1 : Disc oil அனைத்தும் சுத்தமாக துடைத்து எடுக்க வேண்டும்.  ஒரு துணியை வைத்து துடைக்க வேண்டும் 

Step 2 : Caliper இல் இருக்கும் Oil யை சுத்தமாக துடைத்து எடுக்கவேண்டும்.  அதில் உள்ள Brake shoes எடுத்துவிட்டு நன்கு துடைத்து வைக்க வேண்டும்.  

Step 3: புதிதாக Disc oil வாங்கி நிரப்ப வேண்டும்.  Disc pads மாட்டி விட்டு பிறகு Disc liver நன்கு அழுத்த வேண்டும்.  அப்பொழுதுதான் oil air lock இல்லாமல் போகும்.  

Step 4 : பிறகு brake பிடித்தால் நன்றாக பிடிக்கும்.  இதுதான் Disc oil மாற்றும் முறை.  இதை நீங்கள் வீட்டிலிருந்தே எளிதாக மாற்றலாம்.  

முக்கியமாக Brake எப்படி உள்ளது என்று பார்த்துக் கொண்டே இருங்கள்.  Brake இல் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக சரிபார்த்து கொள்ளுங்கள்.  

Post a Comment

0 Comments