How to make a bike smooth?

 How to make a bike smooth?

உங்க bike நன்றாக வைத்துக்கொள்வது எப்படி? 

How to make a bike smooth

How To Solve Brake Sound Problems in Bikes | பைக்கில் Brake பிடிக்கும்போது சத்தம் வருகிறதா? 

How To Solve Brake Sound Problems in Bikes இதை பற்றி முழுமையாக பார்ப்போம். இதை சரிசெய்ய நான் சில டிப்ஸ் கொடுக்கிறேன்.  

Bike இல் பொதுவாக ஏற்படக்கூடிய Problem தான் இந்த Brake Sound Problems இதை நாம் எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  அதிகமாக இந்த Brake Sound Problems மழைகாலத்தில் வரும். அதுவும் அதிகமாக Drum Brake இருக்கும் பைக்கில் தான் அதிகமாக இந்த பிரச்சினை வரும். 

Brake sound Problems வராமல் தடுக்க வாரத்திற்கு ஒரு முறை Brake shoes கழற்றி உப்பு காகிதம் போட்டு நன்கு தேய்க்க வேண்டும்.  பின்னர் Drum உள்பகுதிகளிலும் உப்பு காகிதம் போட்டு நன்றாக தேய்க்க வேண்டும்.  பின்பு தேவையான இடங்களில் கிரீஸ் போடவேண்டும்.  

6 மாதங்களுக்கு ஒரு முறை Brake shoes மாற்ற வேண்டும்.  அப்பொழுது தான் Brake நன்றாக பிடிக்கும்.  பைக்கில் முக்கியமாக Brake தேவை.  இதனால் சரியான முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  இப்படி செய்து பாருங்கள் இனிமேல் உங்கள் பைக்கில் Brake பிடித்தால் சத்தமே வராது.  

How to protect a bike in summer? | வெயில் காலத்தில் பைக்கை பாதுகாப்பது எப்படி?

உங்கள் பைக்கை இந்த வெயில் காலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Bike என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.  ஒவ்வொருவரும் பைக் வைத்துக் கொண்டு இருப்பீர்கள்.  அடிக்கடி சுற்றுலா செல்பவர்களும் உள்ளீர்கள்.  பார்த்து பொறுமையாக போயிட்டு வாருங்கள். 

வெயில் காலத்தில் உங்கள் பைக்கை சரியாக பராமரிக்க வேண்டும்.  இதற்கு நான் சிலா டிப்ஸ் கொடுக்கிறேன்.  

வெயில் காலத்தில் உங்கள் பைக்கை பாதுக்காக்க 6 டிப்ஸ் 

பைக்கை வெயில் இருக்கும் இடத்தில் நிறுத்த வேண்டாம்.  நியல் இருக்கும் இடத்தில் நிறுத்தவும்.  முடிந்த வரை மரம் இருக்கும் இடத்தில் நிறுத்துங்கள்.  பைக் நிறுத்தும்போது பைக் Cover போட்டு மூடிவிட்டு நிறுத்துங்கள்.  உங்கள் பைக் சூடாவதை தவிர்க்கலாம்.  

பைக்கில் Tyre Pressure சரியாக உள்ளதா என 3 நாட்களுக்கு ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 

பைக்கில் Battery சரியாக உள்ளதா என 7 நாட்களுக்கு ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.  ஏனென்றால் வெயில் காலத்தில் Battery உடைந்த நிலையில் இருக்கும்.  அதிகமான வேகத்தில் பைக்கை இயக்க வேண்டாம்.  Engine அதிகம் சூடாகிவிடும்.  இதனால் Engine இல் உள்ள Oil தன்மை மாறிவிடும்.  பிறகு Engine பாதிப்பை ஏற்படுத்தும்.  இதனால் பைக்கில் மெதுவாக செல்லுங்கள்.  

அதிகம் வெயில் இருக்கும் போது பைக் இயக்க வேண்டாம்.  உங்களையும் உங்கள் பைக்கையும் பாதிப்பை ஏற்படுத்தும்.  முடிந்தவரை நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.  

How To Reduce Chain Noise In A Bike? | பைக்கில் செயின் சத்தத்தை குறைப்பது எப்படி? 

Bike Chain Sound Problem

How To Reduce Chain Noise In A Bike என்ற தலைப்பை பற்றி பார்ப்போம்.  பைக்கில் Chain Sound Problem எப்படி வருகிறது.  இதை எப்படி சரிபார்ப்பது என்று இந்த பதிவில் காண்போம்.  இதற்கு சில டிப்ஸ் கொடுக்கிறேன்.  Chain Sound பொதுவாகவே அனைத்து பைக்கிலும் வரும்.  இதை நாம் தான் வராமல் தடுக்க வேண்டும்.   Bike இல் Chain Sound வராமல் தடுப்பது எப்படி?

2000 KM ஒருமுறை Chain இல் Chain Cleaning Spray பயன்படுத்தி நன்கு chain யை துடைக்க வேண்டும்.  அப்படி இல்லை என்றால் Petrol பயன்படுத்தியும் Clean செய்யலாம்.  Chain clean செய்வதற்கு ஒரு Brush உள்ளது அதையும் பயன்படுத்தலாம்.  பின்புறமாக உள்ள பெரிய Chain Sprocket இல் அதிக தூசுக்கள் இருக்கும்.  அதை நன்கு Brush போட்டு தேய்க்கவும்.  

அதேபோன்று முன்புறமாக சிறிய chain sprocket இல் மண் நிறைய இருக்கும் அதை சுத்தமாக சுத்தம் செய்ய வேண்டும்.

Water wash செய்யும் போது chain sprocket மீது தண்ணீர் படும்படி Wash செய்யவும்.  இப்படி செய்வதன் மூலம் Chain நன்றாக சுத்தம் ஆகும்.  

முக்கியமாக Chain க்கு கிரீஸ் போடக்கூடாது.  இதனால் தான் அதிகம் மன் கல் ஆகியவை செயின் இல் ஒட்டிக்கொல்கிறது.  Chain இல் oil மட்டும் தான் போடவேண்டும்.  வாரத்திற்கு ஒருமுறை oil போடுங்கள்.  

இப்படி செய்வதன் மூலம் உங்கள் பைக்கில் Chain Sound Problem வரவே வராது.  இந்த டிப்ஸ் பயன்படுத்திப் பாருங்கள் நன்றாக இருக்கும்.  

Steelbird Bike Mount Mobile Holder full Details 

Steelbird Bike Mount Mobile Holder பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.Bike வாங்கிய உடனே நாம் சுற்றுலா செல்வோம்.  அதற்கு வழிகாட்டியாக இருப்பது Google map.  மொபைல் கையில் வைத்துக் கொண்டு Google map பார்த்து நாம் பைக் ஓட்ட முடியாது.  இதற்காக தான் bike Mobile Holder ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த Mobile Holder பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன.  அதில் எந்த நிறுவனம் அதிக சிறப்பம்சங்கள் வழங்குகிறது அதை தான் நாம் தேடி தேடி வாங்குவோம்.  அதில் ஒரு நிறுவனத்தின் Bike Mobile Holder பற்றி பார்ப்போம்.  

ஒரு சிறிய கதை ஒன்று உங்களுக்கு நான் சொல்கிறேன் நன்கு கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.  நானும் என் நண்பனும் ஒரு இடத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம்.  என் நண்பனுக்கு பைக் ஓட்ட தெரியாது.  மொபைல் பற்றியும் அவ்வளவு தெரியாது.  அந்த சமயத்தில் தான் bike Mobile Holder ஒன்று வாங்கிக் கொண்டு நானே வழி பார்த்து சென்றேன்.  இது எனக்கு மிக உதவியாக இருந்தது.  

Steelbird Bike Mount Mobile Holder Details 

இந்த Steelbird Bike Mobile Holder இல் USB cable வருகிறது.  இது நாம் மொபைலுக்கு Charge போடுவதற்கு உதவுகிறது.  நமக்கு மிகவும் அவசியமாக இருக்கும்.  பைக் மூலம் connection எடுத்துக்கொள்ளலாம்.  Steelbird Mobile Holder output 10-24V ஆகும். Steelbird Mobile Holder bicycle மற்றும் Motorcycle இல் மிக எளிமையாக வைத்துக் கொள்ளலாம்.  அதுவும் நீங்கள் வீட்டில் இருந்து பொருத்திக் கொள்ளலாம்.  உங்கள் பைக்கில் உள்ள Handlebar இல் பொருத்திக் கொள்ளுங்கள்.  

அனைத்து வகையான Smartphones களும் பொருந்தும்.  Steelbird Mobile Holder Aluminium alloy மூலம் உருவாக்கப்பட்டது.  இதனால் அவ்வளவு எளிதில் உடையாது.  

Steelbird Mobile Holder 360 Degree வரை சுற்றிக்கொள்ளலாம்.  இதில் நான்கு புறமும் மொபைல் வைப்பதற்கான வசதி உள்ளது.  அவ்வளவு எளிதில் மொபைல் கீழே விழாது.  

Steelbird Mobile Holder Black நிறத்தில் உள்ளது.  Steelbird Mobile Holder Price ₹599 Amazon இல் உள்ளது.  Allextreme EXHDBL1 Bike Disc Brake Lock 

இந்த காலகட்டத்தில் கடினமாக உழைத்து ஒரு பைக் வாங்குவோம்.  ஆனால் அதை மிக எளிமையாக திருடி சென்று விடுவார்கள்.  இந்த திருட்டை தடுக்க புதியதாக அறிமுகம் செய்துள்ள Bike Disc Lock பற்றி பார்ப்போம்.  

Allextreme நிறுவனம் புதியதாக Disc Brake lock ஒன்று அறிமுகம் செய்துள்ளது.  அதை பற்றி முழுமையாக பார்ப்போம்.  

Bike Disc Brake Lock Installation 

Allextreme நிறுவனத்தின் Bike Disc Brake lock இல் 7mm Pin கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் அவ்வளவு எளிதில் Lock உடைக்க முடியாது.  இந்த Allextreme Bike Disc Brake lock steel மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இது உருளை வடிவத்தில் உள்ளது.  Silver வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  Bike Disc Brake lock திறக்கவும் மூடவும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.  

Bike Disc Brake lock பொருத்துவது எளிது.  பைக்கில் Disc இருக்கும். அதில் துளைகள் இருக்கும்.  அந்த துளைகளில் இந்த Lock பொருத்திக் கொள்ளலாம்.  பிறகு பைக் தள்ளினாள் பைக் போகாது.  பைக்கை தல்லவே முடியாது.  இவ்வளவு தான் இதை பொருத்துவது மிகவும் எளிமை.  

Allextreme EXHDBL1 Bike Disc Brake Lock Price ₹250   

Best Bike Chain Cleaning Brush 

இந்த பதிவில் Best Bike Chain Cleaning Brush பற்றி பார்ப்போம்.  மேலும் இதன் விலை பற்றியும் பார்ப்போம்.  

பைக் ஓட்டும் பொழுது chain இல் இருந்து சத்தம் வரும்.  அந்த சத்தத்தை எப்படி சரிசெய்வது என்று யோசிப்பார்கள்.  ஒரு சிலருக்கு இதை பற்றி தெரியும்.  தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.  

Best Bike Chain Cleaning Brush இதை வைத்து தான் Chain clean செய்ய வேண்டும்.  Chain இல் தூசுக்கல் இருக்கும்.  அதை தண்ணீரை போட்டு துடைத்தாலும் போகாது.  இதனால் தான் chain clean brush வைத்து Clean செய்ய வேண்டும்.  

இந்த Brush எடுத்துக் கொண்டு அதில் Petrol கொஞ்சம் கலந்துக்கொண்டு Chain இல் வைத்து நன்கு தேய்க்க வேண்டும்.  இப்படி செய்வதன் மூலம் chain இல் உள்ள அழுக்குகள் போய்விடும்.  பிறகு chain சுத்தமாக இருக்கும்.  இதுபோல் 1000KM ஒருமுறை செய்ய வேண்டும்.  இப்படி செய்தால் chain sound வராது.  Chain life அதிகரிக்கும்.  இதை அனைவரும் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

Best Bike Chain Cleaning Brush Price ₹100 ஆகும். இதற்கும் குறைவான விலையிலும் உள்ளது.  

Vagary Motorcycle Handlebar Handle Light price Details 

வணக்கம் நண்பா, இந்த பதிவில் Vagary நிறுவனத்தின் Handlebar lights பற்றி முழுமையாக பார்ப்போம்.  Bike இல் நிறைய மாற்றங்கள் வேண்டும் என்று நாம் புதிய புதிய Gadgets வாங்கி பைக்கில் மாட்டுவோம்.  அதே போலதான் இதுவும் ஒரு புதிய Gadget தான்.  Bike இல் உள்ள Handle இல் இந்த இரண்டு Lights பொருத்திக் கொள்ளலாம்.  இதைப் பொருத்துவது மிக எளிது.  

இதில் LED light உள்ளது.  Blink ஆகும்.  இரண்டு colours உள்ளது.  அவை, Blue மற்றும் Orange.  

இந்த lights பொருத்தியப் பிறகு புதிய Modification செய்திருந்தது போல இருந்தது.  

இதற்கு தேவைப்படும் Voltage 12 V (DC) supply அதை நம் பைக்கில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம்.  

இந்த Vagary Light Price ₹200 ஆகும்.  Amazon இல் உள்ளது.  இது போன்ற பல Gadgets தினமும் உங்களுக்கு வரும்.  

How Can I Improve My Bike Mileage?

Increase Bike Mileage

வணக்கம் நண்பா, நாம் வைத்துக் கொண்டு இருக்கும்.  Bike க்கு Mileage எப்படி தெரிந்துக் கொள்வது.  பைக்கில் 1 liter petrol போட்டுவிட்டு நீண்ட தொலைவில் bike ஓட்டி பார்க்கும் பொழுது தான் தெரியும்.  எவ்வளவு Mileage வருகிறது என்று.  நாம் bike ஓட்டி கொண்டே இருப்போம்.  எவ்வளவு petrol போட்டாலும் குடித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றும்.  இப்பொழுது நான் கூறும் Tips நன்கு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுடைய Bike Mileage Increase பண்ணலாம்.  

5 Tips Increase Bike Mileage

Bike நன்றாக துடைத்து பல பலவென்று வைத்துக் கொள்ளவேண்டும்.

Bike இல் ஏதாவது பொருள் போயிருந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும்.

50 -60 KM Speed மட்டுமே bike இயக்க வேண்டும்.  அதற்கு மேலே ஓட்டக் கூடாது. 

Bike Tyre pressure சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு bike இல் இரண்டு நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். 

ஒரே நிறுவனத்தின் Petrol மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

இந்த டிப்ஸ் களை கடைபிடித்தால் உங்களுடைய Bike Mileage Increase பண்ணலாம். 

Post a Comment

0 Comments